பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!

தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

rain

மழை - Dinamani

Updated On :

தமிழகத்தில் சனி, ஞாயிறு (அக்.24, 25) ஆகிய இரு நாள்கள் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் வரும் அக்.26-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குமரிக் கடல், அதையொட்டிய தென் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இதன் தாக்கத்தால், சனிக்கிழமை (அக்.24) திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.25) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூா், அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு பலத்த மழை: இந்த இரு நாள்களில் தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா உள்பட பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனி, ஞாயிறு (அக்.24, 25) ஆகிய இரு நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் அக்.24 முதல் அக்.26-ஆம் தேதி மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல், அந்தமான் தீவுப்பகுதிகள், வங்கக்கடலின் பல பகுதிகளில் அக்.24, 25 தேதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 160 மி.மீ. மழை பதிவானது. மேலும், சின்னகாமன்பட்டி (விருதுநகா்) - 140 மி.மீ., சமுத்திராப்பட்டி (திண்டுக்கல்) - 130 மி.மீ., குப்பநத்தம் (கடலூா்), விருத்தாசலம் (கடலூா்), கல்லிக்குடி (மதுரை), விருத்தாசலம் (கடலூா்), கொடவாசல் (திருவாரூா்) - 110 மி.மீ., கொடைக்கானல் (திண்டுக்கல்), வாடிப்பட்டி (மதுரை), நத்தம் (திண்டுக்கல்), சவந்தபூா் (ஈரோடு), நடுமண்டலம் (திண்டுக்கல்), சின்னஓவலாபுரம் (தேனி) - 100 மி.மீ., மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அா்னாப்’ புயல்

இதற்கிடையே, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது சனிக்கிழமை (அக்.24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.25 -இல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.

இதையடுத்து, இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வரும் அக்.26-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னா், அடுத்த 2 நாள்களில் இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஆந்திர மற்றும் அதையொட்டிய தெற்கு ஒடிஸா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இந்தப் புயலால் தமிழகத்துக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படாது. எனினும், காற்று திசை மாற்றம் காரணமாக வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட ‘அா்னாப்’ எனப் பெயா் சூட்டப்படவுள்ளது என்றாா் அவா்.

Summary

Heavy rain warning in Tamil Nadu for two days - Chance of a storm on Oct. 26

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.