தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு: மு.க. ஸ்டாலின் தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் விஜய்

தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று(அக். 19) கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது குறித்து...

tn rain

தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு! - படம்: ENS

Updated On :

தெற்கு ஆந்திர கடல் பகுகி நோக்கி நகர்ந்த, காற்று சுழற்சி மீண்டும் வடதமிழக கடற்கரை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

”தெற்கு ஆந்திர கடல் பகுதி நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி மீண்டும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, இன்று (அக். 19) வடக்கு / வடகிழக்கு காற்று வீசி அடுத்த 24-36 மணி நேரத்தில் கீழைக்காற்றாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, இன்று பிற்பகலில் ஆங்காங்கே இடிமழை துவங்கி, மாலை / இரவு கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் பரவலாகும்.

காற்று சுழற்சி தமிழக கடற்கரை நோக்கி திரும்புவதால், அக். 20 ஆம் தேதி இரவு முதல் முதல் 23 வரையிலான காலக்கட்டத்தில் தென் கடலோரம், காவிரி டெல்டா, வடகடலோரம், உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என மாநிலம் முழுதும் பரவலாக முதல் சுற்று மழை வேகமெடுக்கும். எனவே பொறுமையுடன் காத்திருங்கள் கண்டிப்பாக நல்ல மழை பதிவாகும்.

முதல் சுற்று மழை அக். 24 / 2 5 வரை நீடிக்கக்கூடும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Private meteorologist Hemachandran has stated that widespread rain is likely across Tamil Nadu as the air circulation, which has moved towards the southern Andhra Pradesh coast, has started moving back towards the northern Tamil Nadu coast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER