அடுத்த 3 மணிநேரத்துக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை!
தமிழகம் முழுவதும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
மழை - பிரதிப் படம்
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கையில், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
தற்போது அடுத்த 3 மணிநேரத்துக்கான (இரவு 7 மணி வரை) மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதில், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Widespread rain across Tamil Nadu for the next 3 hours!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


