உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

imd

முரசு புயல் - படம்: வானிலை ஆய்வு மையம்

Updated On :

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், முரசு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடலில் சனிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இந்தப் புயல் சின்னம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, இந்தப் புயல் சின்னம் இன்று (நவ. 1) முரசு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு, முரசு புயலாக வலுவடைந்துள்ளது.

இந்தப் புயல் சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே - தென்கிழக்கே சுமார் 630 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

நாளை (நவ. 2) மேற்கு - மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவ. 3 ஆம் தேதி காலை வாக்கில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும்.

அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது

Summary

The India Meteorological Department has officially announced that the deep depression over the Bay of Bengal has intensified into a cyclonic storm named 'Murasu'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER