தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க பரிசீலனை செய்வோம்: சந்திரபாபு நாயுடு
தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க பரிசீலனை செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது குறித்து...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜய் - படம் - எக்ஸ்
தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க பரிசீலனை செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை (அக். 13) தெரிவித்துள்ளார்.
கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் இன்று ஆந்திரத்துக்குச் சென்று அம்மாநில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளப் பதிவித் தெரிவித்திருப்பதாவது:
இன்று விஜயவாடாவில், தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய்யை வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரஸ்பர நலன் சார்ந்தும் தெலுங்கு கங்கா திட்டம் மற்றும் கோதாவரி-காவேரி நதி இணைப்பு முயற்சி குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.
இந்த ஆண்டு ஏற்கனவே சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை ஆந்திரப் பிரதேசம் வழங்கியுள்ளது. எங்களுக்கென தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் எங்கள் மக்களின் தேவைகளைச் சமநிலைப்படுத்தி அண்டை மாநிலத்துக்கு கூடுதல் நீர் வழங்க பரிசீலிப்போம்.
நீர் என்பது மோதலுக்கான ஆதாரமாக இல்லாமல் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாநிலங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், கோதாவரி-காவேரி நதி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம், தண்ணீர் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை அளிக்க முடியும். தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளை செழிப்படைய வைக்க முடியும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
It was a pleasure to welcome the Honâble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennaiâs drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious⦠pic.twitter.com/L6PoBmbe0S
— N Chandrababu Naidu (@ncbn) October 13, 2026
Summary
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu stated on Tuesday (Oct. 13) that the release of additional water to Tamil Nadu would be considered.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


