போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல். முருகன்!

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவித்துள்ளது குறித்து...

BJP L. Murugan

எல். முருகன் - கோப்புப் படம்

Published On :

மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் இன்று (அக். 13) அறிவித்துள்ளார்.

2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில் முழுநேர கட்சிப் பணியாற்ற அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தற்போது கட்சிப்பணி ஆற்றிவரும் நிலையில், எல். முருகனும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜிநாமா குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எல். முருகன் எழுதியுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எல். முருகன் பதிவிட்டுள்ளதாவது:

''பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரதத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றுவது என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

ஒரு தினக்கூலியின் மகனாக இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று நாட்டிற்கு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டது சிறந்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

தற்போது நான் களப்பணிக்கு மீண்டும் திரும்பி, 2029 மக்களவைத் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். நாட்டின் நலனே முதன்மை. கட்சி அதற்கு அடுத்தது. இறுதியாகத்தான் எனது நலன்'' என எல். முருகன் பதிவிட்டுள்ளார்.

Summary

BJP L. Murugan resigned from his Union Minister post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.