திமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

பள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். உடற்கல்வி, இணையதள கல்வி ஆகியவற்றுற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி வாரத்தில் 3 நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம், மற்ற இரு நாள்கள் பாடத்திட்டம் சாராத மற்ற செயல்பாடுகளுக்கான (extra curricular activities) வகுப்புகளும் தேவைப்பட்டால் உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். அதன்படி மாணவர்களுக்கு தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும்.

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகளும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாள்கள் உடற்கல்வி வகுப்புகளும் கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு வாரத்தில் 4 பாட வேளையும் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு கூடுதலாக ஒரு பாட வேளையும் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். 1 - 5 ஆம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் ஒரு பாடவேளை, 6-10 ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் ஒரு பாடவேளை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி வகுப்புகளை தவிர்க்கக் கூடாது, புறக்கணிக்கக் கூடாது. மாணவ, மாணவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டில்கூட சாதி, மதம் என எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதித் தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மறுவாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Summary

PET classes in schools on all five days of the week: Rajmohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.