பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்
பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து...

அமைச்சர் ராஜ்மோகன் - ENS
பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) பேசினார்.
தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது அமைச்சர் ராஜ்மோகன், வன்னிஅரசு, வெங்கடரமணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது பெரியார் அறிவுலக விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் வெறும் துறை சார்ந்த நடவடிக்கை என்று எடுக்காமல், முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையில் நானே நேரடியாக புகார் அளித்துள்ளேன். எனவே, அரசியல்வாதி, அதிகாரி யாரும் தப்பிக்க முடியாது.
தமிழ்நாடு முழுவதிலும் நூலகங்களில் சிண்டிகேட் போட்டு அமைந்துள்ள டிஜிட்டல் கரையான்களை நாம் சுத்த செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அந்த டிஜிட்டல் கரையான்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்துவோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
Summary
Minister Rajmohan stated on Sunday (Nov. 8) that no official or politician whoever they may be will be able to escape if they are found to have committed any wrongdoing in matters concerning the Periyar Arivulagam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


