பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

அரிசி விலை உயர்வுக்கு இதுதான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன்

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணம் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்...

Minister Venkataramanan

அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்

Updated On :

ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரிசி விலை உயரவில்லை என்று சமீபத்தில் கூறியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் வெங்கடரமணன்,

"ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, பருப்பு விலை தொடர்பாக ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும். விலை கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

அனைத்து கருத்துகளையும் உள்வாங்கி மக்களுக்கு எது தேவையோ அதன்படி இந்த அரசு செயல்படுகிறது.

என்னுடைய வாழ்க்கையே ரேஷன் கடையில்தான் இருந்திருக்கிறது. வரிசையில் நின்று பொருள்கள் வாங்கியிருக்கிறோம். நாங்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள்தான். அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்.

அரிசி, சர்க்கரை, பருப்பு என அனைத்து உணவுப் பொருள்களுக்கும் தேவையான திட்டங்களை வகுத்திருக்கிறோம். 2, 3 நாள்களில் அதுகுறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

Summary

This is the reason for the rise in rice prices: Minister Venkataramanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.