தொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

தொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறித்து...

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று மு. க. ஸ்டாலின் நேற்று (நவ. 28) அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்த்துப் பேசவுள்ளனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தொகுதி மறுவரையறையை 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அமல்படுத்தினால் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையாது. ஆனால், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எடுத்தால் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும்.

அதனால்தான், திமுக மட்டுமல்லாது நாட்டின் பல கட்சிகள் இதற்கு ஆதரவளிக்கிறது. ஆகையால், அனைத்துக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுத்தான் ஆக வேண்டும்.

இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. இது ஒட்டுமொத்த நாட்டின் நலன்கருதி எடுத்துள்ள நிலைப்பாடு. இல்லையென்றால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அப்போது தமிழ்நாடுக்குத்தான் பாதிப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami stated on Sunday (Nov. 29) that the delimitation of constituencies would not adversely affect anyone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.