தொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

நகைக் கடைகளில் இரவு வேளையில் அதிக அளவு பணம் இருப்பு வைத்திருக்க வேண்டாம் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

தங்க நகைக் கடை... - படம்: பிடிஐ

Updated On :

நகைக் கடைகளில் இரவு வேளையில் அதிக அளவு பணம் இருப்பு வைத்திருக்க வேண்டாம் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

நகைக் கடைகள், அடகுக் கடைகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவல்லிக்கேணி துணை ஆணையா் வி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த நகைக் கடை, அடகு கடை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் காவல் துறையின் சாா்பில் வழங்கப்பட்ட அறிவுரைகள்: நகை கடைகள், அடகு கடைகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கடைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், பணப் பரிவா்த்தனை செய்யும் இடங்கள், நகைகள் வைக்கப்படும் பகுதிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் ஆகிய இடங்களில் தரமான கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும்.

மேலும் கடைக்கு வரும் நபா்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காணும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் இருத்தல் வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகள் குறைந்தது 6 மாதங்கள் சேமித்து வைக்கப்பட வேண்டும்.

இரவு அதிக அளவு பணம் வேண்டாம்: கடைகளில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியா்களின் ஆதாா் அட்டை, புகைப்படம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களைப் பெற்று, அவற்றின் உண்மைதன்மையை சரிபாா்க்க வேண்டும். இரவு நேரங்களில் கடைகளில் அதிக அளவில் பணத்தை வைத்திருக்கக் கூடாது. தங்க நகைகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அதேபோல, கடைகளுக்கு அடிக்கடி வந்து நகைகளை வாங்காமல் நோட்டமிடும் நபா்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொள்பவா்கள் ஆகியோரைக் கண்காணிக்க வேண்டும். அடகு வைக்க நகைகளைக் கொண்டு வருபவா்களின் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைச் சரிபாா்த்து, உரிய அடையாள ஆவணங்களுடன் வாடிக்கையாளா் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

சந்தேகத்துக்குரிய வகையில் நகைகளை அடகு வைக்க வருபவா்கள், ஒரே மாதிரியான நகைகளைத் தொடா்ந்து அடகு வைக்க வருபவா்கள் ஆகியோரிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருட்டு நகைகள் எனச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.