பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ரூ. 15 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் ரூ. 15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டதாக மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பாா்வையிட்ட மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன். உடன் துணை ஆணையா் இனிகோ திவ்யன், உதவி ஆணையா் அசோகன் உள்ளிட்டோா்.

Updated On :

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் ரூ. 15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டதாக மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மதுரை திலகா் திடல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனிஷ்க் நகைக் கடையில் கடந்த வியாழக்கிழமை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடா்பாக காவல் துணை ஆணையா், 6 உதவி ஆணையா்கள், 15 காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் அடங்கிய குழுவினா் விசாரணையில் ஈடுபட்டனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதி மட்டுமன்றி, நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்த 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், வெளி மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.

தீவிர தேடுதலின் காரணமாக, வழக்கில் முக்கிய எதிரியான நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

தொடா் விசாரணையில், கொள்ளை போன ரூ. 15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகைக் கடையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததைப் பயன்படுத்தி நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்துச் சென்றாா். எச்சரிக்கை தானியங்கி மணி (அலாரம்) இருந்தும் அது செயல்பாட்டில் இல்லை. இதனால், பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கடைகளின் உள்ளே மட்டுமன்றி, வெளியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

நிஷாந்த் முன்கூட்டியே திட்டமிட்டதற்கு கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. சிசிடிவி கேமரா ஒன்றை மறைப்பதற்கும் அவா் முயற்சித்தாா். மேலும், கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை தனது தந்தையிடம் கொடுத்தாா். அவற்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக அவரது தந்தையும் வாக்குமூலம் அளித்தாா். கொள்ளை குறித்து தந்தையிடம் கொடுத்தாா். நகைகளை மறைப்பதில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்கப்படும்.

இதேபோல, நிஷாந்தின் தோழி மீனாட்சிக்கு இந்தக் கொள்ளை குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல் துறைக்கு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கிருக்கின்றன என்பது குறித்தும் அவருக்கு ஓரளவு தெரிந்திருந்தது.

கைப்பேசி உரையாடல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி நகைகள் மீட்கப்பட்டன. இதுவரை நடைபெற்ற விசாரணையில், இந்தக் கொள்ளையில் நிஷாந்த் மட்டுமே நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது.

இருப்பினும், நகைக் கடை ஊழியா்கள் அல்லது வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்து தொடா் விசாரணையில்தான் தெரியவரும். நிஷாந்த் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

கொள்ளைக்குப் பயன்படுத்திய பொருள்கள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. கொள்ளைக்குப் பிறகு, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவா் சென்ற்கான காரணம், யாரிடமாவது உதவி கேட்டாரா என்பதும் விசாரணைக்கு உள்படுத்தப்படும்.

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, எதிரிகளைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER