தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

நாங்கள் எட்டப்பர்கள் அல்லர், கட்டபொம்மன்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளில் திமுக சமரசம் செய்துகொள்ளாது என மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து...

MK Stalin | Rahul Gandhi

ராகுல் காந்தியுடன் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு திமுக முடிவெடுத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் பங்களிப்பை எடுத்துரைத்த ராகுல் காந்திக்கு நன்றி.

மாநில மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில்கொண்டு மட்டுமே திமுக எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளது. மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

நாங்கள் எட்டப்பர்கள் அல்லர், கட்டபொம்மன்கள் என வரலாறு தீர்ப்பளிக்கும்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதற்காக, மு.க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சந்திக்கவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த மசோதாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்தியின் பதிவுக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Summary

DMK will not compromise on Tamil Nadu's rights, says Former Chief Minister MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.