தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்

தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க அடிக்கடி ரெய்டு நடத்தப்படுவதாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளது குறித்து...

மு.க. ஸ்டாலின்

Updated On :

முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல என்றும், சூட்டிங்கிற்குச் சென்று வருவதைப்போன்று இருக்க முடியாது எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

5 ஆண்டுகளில் பெற வேண்டிய அவமானங்களை, 5 மாதங்களில் தவெக அரசு பெற்றுவிட்டதாகவும் தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க அடிக்கடி ரெய்டு நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

கோவை வ.உ.சி பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''திகவின் பாராட்டை ஊக்கமாகக் கருதுகிறேன். இந்த பாராட்டு விழா, தாய் தன் குழந்தைக்கு தந்த முத்தம் போன்றது. பெரியார் கொள்கையை மலைபோல் காப்பவர் கி. வீரமணி. என்னையும் காத்தவர் கி. வீரமணி.

திகவின் பாராட்டை இன்னும் பல சாதனைகள் படைப்பதற்காக ஊக்கமாக கருதுகிறேன்.

நாங்கள் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிப்பதே பெரியார்தான்; அவரது கொள்கையை காப்பதே கி.வீரமணிதான்.

தமிழ்நாட்டின் அறிவுலகம் பெரியார். பெரியார் அறிவுலகத்திற்கு திமுக ஆட்சியிலேயே 99% பணிகளை முடித்துவிட்டோம். திமுக தொடங்கிய பெரியார் அறிவுலகத்துக்கு ஜோசியரிடம் கேட்டு திறந்துவைத்துள்ளார் முதல்வர் விஜய்.

தவெக அரசை யாராலும் விமர்சிக்காமல் இருக்க முடியாது. தவெக ஆட்சியில் அனைத்தையும் ஜோசியர்தான் முடிவு செய்கிறார். பவர் செண்டர் இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் பேசினார். ஆனால், அவரை ஆட்டிப்படைத்துதான் ஆட்சி நடக்கிறது.

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்னை வந்துவிட்டது. இப்போதுவரை மின்வெட்டு பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. குடியரசு துணைத் தலைவர் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபடச் செல்லும்போது கூட மின்வெட்டு ஏற்படுகிறது. மறுநாள் பொறியாளர் மீது நடவடிக்கை பாய்கிறது.

தமிழ்நாடு கொலை நகரமாக மாறி வருகிறது. தூய சக்தி ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு தம்பட்டம் அடித்தனர். ஆனால், தமிழ்நாட்டில் கொலை செய்திகள் துர்நாற்றம்போல் பரவுகின்றன.

சிறுமிகள் காணாமல்போவது அதிகரிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் தவெகவில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.

குற்றவாளிகளை பிடிக்கத்தான் வக்கில்லை என்றால், பிடித்த கைதிகளையும் காக்க தவெகவுக்கு வக்கில்லை. கைதிகள் தப்பித்துச் செல்வதும் தவெக ஆட்சியில் அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்கின்றன. பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. 5 மாதங்களில் தரை மட்டமாகிவிட்டது.

5 ஆண்டுகளில் பெற வேண்டிய அவமானங்களை, 5 மாதங்களில் பெற்றுவிட்டது தவெக அரசு. 6 மாதங்களில் மக்களின் வயித்தெறிச்சலை சம்பாதித்துவிட்டனர். திமுக தொடங்கிவைத்த திட்டங்களை திறந்துவைத்துவிட்டு தம்பட்டம் அடிக்கின்றனர்'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Summary

The Chief Minister's job is not a 10-to-5 role: M.K. Stalin criticizes Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.