ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?
ஜிபே செயலியில் பயோமெட்ரிக் பயன்பாடு வந்திருக்கிறது, இதனை மீண்டும் பின் எண்ணாக மாற்றுவதற்கான வழி

ஜிபே விதிமுறை - Express Illustrations
ஜிபே செயலியில் புதிதாக ஒரு மாற்றம் வந்திருக்கிறது. பணம் பரிமாற்றம் செய்ய பின் எண்ணுக்கு பதிலாக பயோமெட்ரிக் முறையில் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதே அது.
ஒவ்வொரு முறையும் நீளமாக ஆறு பின் எண்களை போட்டு பணப்பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக இப்படி கைரேகை வைத்து பணப்பரிமாற்றம் செய்து கொள்வது பலருக்கும் பிடித்திருக்கலாம்.
சிலருக்கு இதில் ஏதேனும் நெருடலோ, ஒரு பாதுகாப்பாற்ற தன்மையோ இருக்கலாம். அவ்வாறு பயோமெட்ரிக் முறை பிடிக்காதவர்கள், தங்களது ஜிபே செயலியில் சென்று இந்த வசதியை முடக்கிவிடலாம்.
அதற்கு செய்ய வேண்டியது என்ன?
• ஜிபே- செயலிக்குள் உள் நுழையவும்.
• முகப்புப் பக்கத்தில் புரொஃபைல் பிக்சர் அல்லது பெயரின் முதல் எழுத்தைக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
• பேங்க் அக்கவுண்ட் என்ற வாய்ப்பைக் கிளிக் செய்தால் அந்த பக்கத்தில் ஜிபே செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.
• அதில் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்துகிறீர்களோ அந்த வங்கிக் கணக்கை கிளிக் செய்தால் பல ஆப்ஷன்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
• கடைசியாக நியூ என்ற அடையாளத்தோடு மேனேஜ் பயோமெட்ரிக் என்ற வாய்ப்பு இருக்கும்.
• அதனைக் கிளிக் செய்து பயோ மெட்ரிக் அல்லது முக அடையாளம் ஆப்ஷன் ஆன் செய்திருந்தால் அதனை டிஸ்ஸேபிள் செய்யவும்.
• உறுதிப்படுத்தும் தகவலில் ஆமாம் என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு, வழக்கம் போல பின் எண்ணைப் பயன்படுத்தி ஜிபே செயலியைப் பயன்படுத்தலாம்.
Summary
Biometric authentication in the GPay app – how to disable it if you don't want it?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

