இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? என சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

கோப்புப் படம்

Updated On :

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை எப்போது தொடங்கும் என சிபிஐ தரப்புக்கு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா பொருள்களை விற்பனைக்கு அனுமதித்தது தொடா்பாக, முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஸ்வரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்பட 24 போ் ஆஜராகி இருந்தனா். முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் எப்படி விசாரித்து முடிக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை எப்போது தொடங்கும் எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், இது தொடா்பாக சிபிஐ தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் நவ. 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

Summary

In the Gutka scam case, the special court for MPs and MLAs in Chennai questioned the CBI on Wednesday (Nov. 4) as to when the examination of witnesses would commence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.