இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!

இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம் என ஈரான் அறிவித்துள்ளது குறித்து...

Strait of Hormuz

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :

ஹோா்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஈரான் விலக்கு அளித்துள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் கடந்த 9 மாதங்களாக போா் நடைபெறுகிறது. இதனால் அமெரிக்க ராணுவ தளங்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியே பல்வேறு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் செல்ல ஈரான் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், அந்த கட்டுப்பாடுகளில் இருந்து இந்திய கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புத் துறை மற்றும் வெளிநாட்டு கொள்கை கமிட்டி துணைத் தலைவருமான அமீா் ஹயாத் மொக்தம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஈரானைச் சோ்ந்த செய்தி நிறுவனத்துக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தியா, சீனா, கத்தாா், ஈராக் ஆகிய 4 நாடுகளின் கப்பல்களுக்கு ஹோா்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக ஹோா்முஸ் நீரிணை வழியே செல்லலாம். அமெரிக்கா்கள் அக்கப்பல்களுக்கு இடையூறு செய்யக் கூடாது’ என்றாா்.

இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய ஏதுவாக இந்திய கப்பல்களுக்கும், சீனாவின் அரசியல் ஆதரவு தேவைப்படுவதால் அந்த நாட்டின் கப்பல்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மேற்காசிய போரில் சுமாா் 15 இந்திய மாலுமிகள் இதுவரை உயிரிழந்துள்ளனா். அண்மையில் ஓமனையொட்டிய கடற்பகுதியில் சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran announced on Wednesday (Nov. 4) that Indian ships may pass freely through the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.