திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபமேற்ற பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து...
திருப்பரங்குன்றம் - கோப்புப்படம்
திருப்பரங்குன்றம், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபமேற்ற பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 29 முதல் டிசம்பர் 15 வரை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நாள்களில், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை, பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் (நவ. 24) தீபம் ஏற்றலாம் என உச்ச உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால், இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
பின்னர், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் சனிக்கிழமை (நவ. 28) தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். ஆகையால், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary
Permission has been granted to the public to light lamps near the Uchi Pillaiyar Temple in Tirupparankundram on Sunday (Nov. 29).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


