திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் மலை மீது ஏற்றப்பட்ட தீபம்!
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் மலை மீது இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது குறித்து...
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம் - எக்ஸ்
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மலை மீது இன்று (நவ. 24) மகா தீபம் ஏற்றப்பட்டது.
மலைக்கோட்டை வளாகத்தில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயிலும், நடுவில் தாயுமானசுவாமி கோயிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் மலை உச்சியின் மீது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாலையில் தீபம் பார்வையிடும் மண்டபத்துக்கு விநாயகர், முருகன் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். பிறகு தங்கக் கொடிமரம் முன் அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதேபோன்று திருப்பரங்குன்ற மலை உச்சியில் வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மலையின் மீதுள்ள தூண் மீது தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
Summary
A lamp lit atop the Uchi Pillaiyar Temple hill in Trichy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


