திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம் எழுப்பியுள்ளது குறித்து...

கோஷம் எழுப்பிய ஹிந்து அமைப்பினர் - படம் - தினமணி

Updated On :

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படும் என எதிர்நோக்கி காத்திருந்த ஹிந்து அமைப்பினர், கோயில் சன்னதி வீதியில் நின்று அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால், இந்த தூணில் இதுவரை தீபம் ஏற்றப்படவில்லை.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் வழக்கமான நடைமுறைகள்படி மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த இடமான தூணில் தீபம் ஏற்றப்படாததால் அங்கு கூடிய ஹிந்து அமைப்பினர் உள்ளிட்ட பக்தர்கள் அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் அவர்களுக்குள்ளே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இனிமேலும் தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Hindu organizations are raising slogans against the government because a lamp was not lit on a pillar at Tirupparankundram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.