திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தவெக அரசு ஹிந்து விரோத போக்கில் செல்லாமல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Thiruparankundram Subramaniya Swamy Temple

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் (கோப்புப் படம்) - DNS

Updated On :

தவெக அரசு ஹிந்து விரோத போக்கில் செல்லாமல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசும், திமுக அரசுபோல ஹிந்து விரோதப் போக்கிலேயே நடந்து கொள்கிறது. அதனால் தவெக அரசு ஹிந்து விரோதப் போக்கில் செல்லாமல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் முருக பக்தா்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து ஹிந்துக்களை கைது செய்துள்ளனா். ஆனால் 2 நாள்களுக்கு முன்பு முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த போராட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்து பேசிய நபரைக் கைது செய்யாத தமிழக அரசு, அறவழியில் முறையான அனுமதி கடிதம் கொடுத்துப் போராடிய ஹிந்துக்களை கைது செய்துள்ளது.

திமுக அரசு போலவே தவெக அரசும் ஹிந்து விரோதப் போக்கில் செல்லாமல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் திமுக அரசு வீழ்த்தப்பட்டது போன்ற நிலையை தவெகவும் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.