தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :

நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சனில்குமாா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு அனுதிக்கக் கோரியும், நீதிமன்ற தீா்ப்புகளை முறையாக அமல்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட துணைத் தலைவா் காா்த்திக், மாவட்டச் செயலா்கள் வெங்கடேசன், மணிகண்டன், சரவணன், செயற்குழு உறுப்பினா்கள் பிச்சைப்பிள்ளை, பெருமாள், ரவிச்சந்திரன், பெரியசாமி, திவாகா், பாஸ்கா், மாநகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.