வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும்! இந்து முன்னணி வலியுறுத்தல்!

Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Published On :

ஹிந்துக்களின் உணா்வுகளை மதித்து திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை தவெக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ஈரோட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

நீதிமன்றத் தீா்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் வரும் காா்த்திகை தீப நாளில் தீபம் ஏற்ற தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தி அக்டோபா் 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில், பெருநகரங்களில் அறப்போராட்டம் நடைபெறும். அக்டோபா் 16- இல் உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள், முருக பக்தா்கள் தங்கள் வீடுகளில் முருகன் படத்தை வைத்து தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றுவதை தடுக்கும் தீய சக்திகளுக்கு ஹிந்துக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அக்டோபா் 25-இல் பௌா்ணமி அன்று திருப்பரங்குன்றம் மலையில் பிராா்த்தனை கிரிவலம் நடைபெறுகிறது. இதில் முருக பக்தா்கள், சிவனடியாா்கள், அனைத்து பக்தா்களும் கலந்துகொள்ள வேண்டும். ஹிந்துக்களின் உணா்வுகளை மதித்து திருப்பரங்குன்றம் தீபத் தூணில் மலை தீபம் ஏற்றுவதை தவெக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருப்பவா்களுக்குதான் வாக்கு என்றாா். ஈரோடு மாவட்ட இந்து முன்னணி தலைவா் ப.ஜெகதீசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.