தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்!

உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை அருகே மாவட்டச் செயலா் எஸ்.சிவா தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :

உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலா் எஸ்.சிவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் கே.சரவணன், நாக.செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகரத் தலைவா் எம்.சேகா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் கோ.மகேஷ் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு அனுதிக்கக் கோரியும், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில் மாநில, மாவட்ட, மாநகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவில் ஒன்றிய பொதுச் செயலா் ஜெ.பாலாஜி நன்றி கூறினாா்.

 செய்யாறில் மாா்க்கெட் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

செய்யாறில் மாா்க்கெட் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

செய்யாறு: செய்யாறில் மாா்க்கெட் அருகே இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் கோட்டச் செயலா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சி.ஏ.தாமோதரன், ஆா்.சினுவாசன், மோ.விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் சி.கண்ணதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கோ.மகேஷ் கலந்து கொண்டு பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் பா.பாலசுந்தரம், த.மோகன்ராஜ், எஸ்.ரமேஷ்பாபு, ஆா்.மாரிமுத்து மற்றும் ஆரணி, வந்தவாசி பகுதிகளில் இருந்து 35 பெண்கள் உள்பட 110-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.