வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியதைப் பற்றி...

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி.

Updated On :

சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு (75), தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இவரது மறைவைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் கொண்டுச் செல்லப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வி.எஸ். பாபுவின் வீட்டுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வி.எஸ். பாபுவின் மனைவி, அவரது பிள்ளைகளின் கைகளைப் பற்றி முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

காலஞ்சென்ற வி.எஸ். பாபுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Summary

Chief Minister C. Joseph Vijay paid his respects to the mortal remains of Kolathur MLA V. S. Babu, which were kept in Perambur, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.