கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய்யுடன் வி.எஸ். பாபு - (கோப்புப்படம்)
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவுக்கு முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முன்னாள் திமுக எம்.எல்.ஏவான இருந்த வி.எஸ். பாபு, கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்ததால், தனிக்கவனம் பெற்றிருந்தார். 2006 ஆம் ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபு திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
à®à¯à®³à®¤à¯à®¤à¯à®°à¯ தà¯à®à¯à®¤à®¿ à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ திரà¯.வி.à®à®¸à¯.பாப௠à®à®µà®°à¯à®à®³à¯ à®à®à®²à¯à®¨à®²à®à¯à®à¯à®±à¯à®µà®¾à®²à¯ மறà¯à®¨à¯à®¤ à®à¯à®¯à¯à®¤à®¿ à®à®±à®¿à®¨à¯à®¤à¯ à®à®´à¯à®¨à¯à®¤ வà¯à®¤à®©à¯à®¯à¯à®®à¯, தà¯à®¯à®°à®®à¯à®®à¯ à®à®à¯à®¨à¯à®¤à¯à®©à¯.
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 19, 2026
பà¯à®¤à¯à®µà®¾à®´à¯à®µà®¿à®²à¯ தனà¯à®©à¯ à®®à¯à®´à¯à®®à¯à®¯à®¾à® à®à®°à¯à®ªà¯à®ªà®£à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯, à®®à®à¯à®à®³à¯à®à¯ à®®à®à¯à®à®³à®¾à®à®ªà¯ பழà®à®¿, à®à®©à¯à®µà®°à®¿à®©à¯ à®à®©à¯à®ªà¯à®¯à¯à®®à¯, à®à®¤à®°à®µà¯à®¯à¯à®®à¯, நமà¯à®ªà®¿à®à¯à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ பà¯à®±à¯à®±à®¿à®°à¯à®¨à¯à®¤â¦ pic.twitter.com/e3eNGqNflo
Summary
Vijay, the Chief Minister and leader of the Tamilaga Vettri Kazhagam, has expressed his condolences on the passing of V.S. Babu, the MLA for the Kolathur constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

