வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!

சிகிச்சை பலனின்றி கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்

vs babu

வி.எஸ். பாபு

Updated On :

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்ததால், தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தனிக்கவனம் பெற்றிருந்தார்.

முன்னதாக, வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்திருந்தார். வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு, செப். 9ஆம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல துறை மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சைகளையும் தாண்டி, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், நவ. 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு, வி.எஸ். பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

அரசியல் வாழ்க்கை!

2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.

திமுகவுக்கு வந்த சேகர்பாபு, வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தியதால், அதிருப்தியில், திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்காக உழைத்த வி.எஸ். பாபு, 2026 பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்தே தவெக சார்பில் களமிறக்கப்பட்டு, வெற்றியும் பெற்றிருந்தார்.

Summary

Kolathur TVK MLA V.S. Babu has passed away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.