தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!

கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு கேப் டவுன் நகரமே சாட்சியாக உள்ளது...

Chhattisgarh: Nawapara villagers descend into dried wells for water amid acute crisis

கேப் டவுன் நகரமே சாட்சி - ANI

Updated On :

தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுன், தண்ணீர் தீர்ந்துபோன உலகின் முதல் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்ற போதும் அந்நகரம், புதிய தண்ணீர் கடுப்பாடு விதிகளை டிச. 1 முதல் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2015 - 2018ஆம் ஆண்டுகளில் மழை இல்லாமல், தொடர்ச்சியாக பஞ்சம் ஏற்பட்டு, ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாத, தண்ணீர் தீர்ந்துபோன முதல் நகரமாக அறிவிக்கப்படுவதிலிருந்து, நூலிழையில் தப்பியது கேப் டவுன். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த நாள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த பழைய தகவல்கள் மற்றும் தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையால், தற்போது தண்ணீர் தீர்ந்து போன நகரம் என்ற தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவக் காரணமாகியிருக்கிறது.

கேப் டவுன் நகரில், 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் அந்நகர மக்களுக்கு அரசால் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என்ற நிலைதான் தற்போது உள்ளது.

எனவே, டிசம்பர் 1ஆம் தேதி முதல், அந்நகரில் புதிய தண்ணீர் விநியோக முதல் நிலை கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இதன் மூலம், ஒட்டுமொத்த தண்ணீர் பயன்பாட்டில் 10 சதவிகிதம் வரை குறைக்கப்படும்.

இந்த முதல்நிலைக் கட்டுப்பாட்டில், ஒரு நபர், ஒரு நாளைக்கு 85 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

தோட்டங்களுக்கு செவ்வாய், சனி மட்டுமே ஒரு மணி நேரம் தண்ணீர் வழங்க அனுமதி.

நீச்சல் குளங்கள் பயன்படுத்தப்படாதபோது முழுமையாக மூடி வைக்கப்பட வேண்டும்,

வாகனங்கள் மற்றும் தரைப் பகுதியை தண்ணீர் கொண்டு கழுவுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிச. 1 நடைமுறைக்கு வரவிருக்கும் முதல் நிலைக் கட்டுப்பாட்டைப் போல, அந்நகரில் தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏழு நிலை வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 - 18ஆம் ஆண்டுகளில் இந்த கேப் டவுன் நகரம் கடும் பஞ்சத்தை எதிர்கொண்ட போது, ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு வெறும் 25 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நியாய விலைக் கடைகள் போல தண்ணீர் நாள்தோறும் அளவோடு வழங்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடு, மக்களிடையே விழிப்புணர்வு போன்றவற்றை பின்பற்றி, அப்போது ஏப்ரல் மாதம் வர வேண்டிய தண்ணீர் இல்லாத நாளை மே மாதம் வரை தள்ளிப்போட்ட கேப் டவுன், பருவமழையால் அந்த அறிவிப்பிலிருந்து நூலிழையில் தப்பியிருந்தது.

Summary

What would it be like to face a severe water shortage? The city of Cape Town stands as proof!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.