26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்ட நிலையில், 26 நாள்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறித்து...

உதகை மலை ரயில் - படம் - தினமணி

Updated On :

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு சரி செய்யப்பட்ட நிலையில், 26 நாள்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் வியாழக்கிழமை (நவ. 19) தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த அக். 23 ஆம் தேதி கனமழை காரணமாக உதகை செல்லும் சாலை மற்றும் தண்டவாளப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, மலை ரயில் போக்குவரத்து கடந்த 26 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மழை ரயிலில் பயணம் செய்யயும் சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், மலை ரயிலில் பயணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருந்ததாகவும் இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதால் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வதாகவும் மலை ரயில் பயண அனுபவத்தை அறிந்து கொள்ள ஆவலுடன் பயணிப்பதாகவும் கூறினார்.

Summary

Following the repair of a landslide caused by heavy rains, the Udhagamandalam (Ooty) mountain railway service resumed on Thursday (Nov. 19) after a 26-day suspension.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.