உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

உதகை மலை ரயில் சேவை. - கோப்புப்படம்.
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அக். 23ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பர்லியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன.
இதேபோல, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 65 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, பாறைகளும் கற்களும் தண்டவாளத்தில் விழுந்தன.
இதனால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண் சரிவு ஏற்பட்ட 65 இடங்களில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
மீதமுள்ள இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் பாதைகளில் சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையடையாததால், மலை ரயில்கள் நவம்பர் 14 முதல் 18 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 நாள்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 நாள்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
Summary
It has been announced that the Mettupalayam - Ooty mountain railway service is cancelled for another 5 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


