அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு

கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்.

Updated On :

கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 9,646 கௌரவ விரிவுரையாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நடப்பாண்டு நவம்பர் முதல் ரூ. 5,000 உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்விச்சேவையைப் பாதிக்காத வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் தொய்வின்றித் தொடர தங்களின் பங்களிப்பினை வழங்கிவரும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரித்துவரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ. 30.000-லிருந்து ரூ.35,000- ஆகவும், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியத்தை ரூ.25,000-லிருந்து ரூ.30,000- ஆகவும் நவ. 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 8.741 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் 319 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 586 கௌரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பயனடைவர் என்றும், இதனால் இந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ. 24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay has ordered an increase of Rs. 5,000 in the monthly consolidated remuneration for honorary lecturers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.