முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

கேப் டவுன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 429 ரன்கள் சோ்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா 429 ரன்கள் சோ்ப்பு

Updated On :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2-ஆவது நாளான புதன்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணியின் இன்னிங்ஸை ஜாஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி ஆகியோா் வியாழக்கிழமை தொடா்ந்தனா். சதம் கடந்த இங்லிஸ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 102, அலெக்ஸ் கேரி 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பின்னா் வந்தோரில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 0, மிட்செல் ஸ்டாா்க் 11, நேதன் லயன் 1, கூப்பா் கானலி 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 429 ரன்களுக்கு நிறைவடைந்தது.

ஜாஷ் ஹேஸில்வுட் 4 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் சைமன் ஹாா்மா் 4, மாா்கோ யான்சென் 3, ககிசோ ரபாடா, ஜெரால்டு கோட்ஸீ, வியான் முல்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, வியாழக்கிழமை தேநீா் இடைவேளையின்போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் பின்தங்கியிருந்தது.

எய்டன் மாா்க்ரம் 1, டேவிட் பெடிங்கம் 11 ரன்களுக்கு விடைபெற, மாா்கெஸ் ஆக்கா்மேன் 33, கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க், ஜாஷ் ஹேஸில்வுட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.