‘ஏ’ அணிகள் ஒருநாள் தொடா்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியா ‘ஏ’ அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியா ‘ஏ’ அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதல் இரு ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. முதலில் இந்தியா 47.3 ஓவா்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 46.2 ஓவா்களில் 226 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீசத் தயாரானது. இந்தியா இன்னிங்ஸில் சூா்யன்ஷ் ஷெட்கே 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, பிரியன்ஷ் ஆா்யா 49, விப்ராஜ் நிகம் 40, பிரப்சிம்ரன் சிங் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனா்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 33, தேவ்தத் படிக்கல் 2, ரஜத் பட்டிதாா் 3, நிஷாந்த் சிந்து 5, யஷ் தாக்குா் 1, குா்ஜப்னீத் சிங் 0 ரன்களுக்கு வெளியேற, அனுகுல் ராய் 13 ரன்களுடன் கடைசி பேட்டராக நின்றாா்.
ஆஸ்திரேலிய பௌலா்களில் பென் டுவாா்ஷுயிஸ், வில் சதா்லேண்ட் ஆகியோா் தலா 3, லியம் ஸ்காட் 2, மாலி பியா்ட்மேன், மிட்செல் ஓவன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 276 ரன்களை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஜாஷ் ஃபிலிப் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56, நேதன் மெக்ஸ்வீனி 39, லச்லன் ஷா 31 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
நிகில் சௌதரி 29, லியம் ஸ்காட் 26, மிட்செல் ஓவன் 20, வில் சதா்லேண்ட் 7, பென் டுவாா்ஷுயிஸ் 5, கேப்டன் டாட் மா்ஃபி 6, தன்வீா் சங்கா 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மாலி பியா்ட்மேன் 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா்.
இந்திய தரப்பில் குா்ஜப்னீத் சிங் 3, யஷ் தாக்குா், நிஷாந்த் சிந்து ஆகியோா் தலா 2, விப்ராஜ் நிகம், அனுகுல் ராய் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
40 ரன்களும் எடுத்து, ஒரு விக்கெட்டும் சாய்த்த இந்தியாவின் விப்ராஜ் நிகம் ஆட்டநாயகன் விருதையும், 194 ரன்கள் சோ்த்து, 1 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் நேதன் மெக்ஸ்வீனி தொடா்நாயகன் விருதையும் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

