ஜார்ஜியா வோல் அதிரடி சதம்... வங்கதேசத்துக்கு எதிரான ஓடிஐ தொடரை வென்றது ஆஸி.!
வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஜாா்ஜியா வோல், போப் லிட்ச்ஃபீல்டு
வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்திலும் வென்ற ஆஸ்திரேலியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தற்போது தன் வசமாக்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 28.1 ஓவா்களில் 1 விக்கெட் இழந்து, 222 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் செய்தது. வங்கதேச இன்னிங்ஸில் சோபனா மோஸ்தரி 18 பவுண்டரிகளுடன் 118, கேப்டன் நிகா் சுல்தானா 74 ரன்கள் அடித்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மீகன் ஷூட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் ஜாா்ஜியா வோல் 19 பவுண்டரிகளுடன் 131*, போப் லிட்ச்ஃபீல்டு 70 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வழிவகுத்தனா். வங்கதேச தரப்பில் ஷோா்னா அக்தா் 1 விக்கெட் சாய்த்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

