முதல் டி20: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நிகில் சௌதரி - படம் | AP
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மெல்போர்னில் இன்று (நவம்பர் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
ஹாரி ப்ரூக் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டொனால்டு 10 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் டாம் பாண்டன் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹாரி ப்ரூக் 28 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். டாம் பாண்டன் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஜோர்டான் காக்ஸ் 27 ரன்கள், சாம் கரண் 21 ரன்கள் மற்றும் லியம் டாஸன் 17 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் நிகில் சௌதரி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோயல் டேவிஸ், ரைலி மெரிடித், பென் துவார்ஷூயிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
நிகில் சௌதரி அரைசதம்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய நிகில் சௌதரி 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்கள், சாம் ஹார்ப்பர் 32 ரன்கள், ஜாக் எட்வர்ட்ஸ் 25* ரன்கள் எடுத்தனர்.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட சாம் கரண் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார் ஜாக் எட்வர்ட்ஸ். அதன் பின், இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. இறுதியில், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியம் டாஸன், ஹென்றி க்ரோகோம்ப், ஜேமி ஓவர்டன், சாம் கரண் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிகில் சௌதரிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
Australia secured a thrilling 3-wicket victory in the first T20 match against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


