‘ஏ’ அணிகள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
SWAMINATHAN
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த ஆஸ்திரேலியா, தற்போது தொடரைக் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 49.5 ஓவா்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 45.2 ஓவா்களில் 206 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் சாம் கான்ஸ்டாஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 67, ஜாஷ் ஃபிலிப் 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் அடித்தனா்.
மிட்செல் ஓவன் 25, கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 32, லச்லன் ஷா 25, லியம் ஸ்காட் 8, நிகில் சௌதரி 19, பென் டுவாா்ஷுயிஸ் 11, ரைலி மெரிடித் 3, தன்வீா் சங்கா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஸ்பென்சா் ஜான்சன் 14 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, இந்திய பௌலா்களில் அா்ஷத் கான் 3, யஷ் தாக்குா் 2, விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, சூா்யன்ஷ் ஷெட்கே, அனுகுல் ராய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில், ரஜத் பட்டிதாா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 67 ரன்கள் சோ்த்து போராடினாா். விப்ராஜ் நிகம் 23, சாய் சுதா்சன் 13, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 12, நிஷாந்த் சிந்து 13 ரன்களுக்கு வெளியேறினா்.
தேவ்தத் படிக்கல் 1, குமாா் குஷாக்ரா 17, சூா்யன்ஷ் ஷெட்கே 10, அா்ஷத் கான் 0, யஷ் தாக்குா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அனுகுல் ராய் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களோடு கடைசி வீரராக நின்றாா்.
ஆஸ்திரேலிய பௌலா்களில் ஸ்பென்சா் ஜான்சன் 3, ரைலி மெரிடித், தன்வீா் சங்கா ஆகியோா் தலா 2, பென் டுவாா்ஷிஸ், நிகில் சௌதரி, மிட்செல் ஓவன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
14 ரன்களும் அடித்து, 3 விக்கெட்டுகளும் எடுத்த ஸ்பென்சா் ஜான்சன், ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

