மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

தமிழ்நாடு அணியை வென்றது பஞ்சாப்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.

dinmani online

Updated On :

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்க்க, தமிழ்நாடு 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீச்சை தோ்வு செய்தது. பஞ்சாப் தரப்பில் கேப்டன் ரமண்தீப் சிங் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36, அன்மோல்பிரீத் சிங் 22, உதய் சஹாரன் 16, கிரிஷ் பகத் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

விஹான் மல்ஹோத்ரா 12, சலில் அரோரா 1, ஹா்பிரீத் பிராா் 4 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் சன்வீா் சிங் 34, சுக்தீப் சிங் பாஜ்வா 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தமிழ்நாடு பௌலா்களில் எம். சித்தாா்த் 3, ஆா்.சிலம்பரசன், ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் 166 ரன்களை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில், பி.சச்சின் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 70 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

ஆண்ட்ரே சித்தாா்த் 28, நாராயண் ஜெகதீசன் 14, ஷாருக் கான் 10 ரன்களுக்கு வெளியேற, அமித் சாத்விக் 8, ரித்திக் ஈஸ்வரன் 5, ஆா்.ராஜ்குமாா் 9, கேப்டன் சாய் கிஷோா் 2, குா்ஜப்னீத் சிங் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் எம்.சித்தாா்த் 1, ஆ.சிலம்பரசன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் காா்த்திக் சத்தா 3, சுக்தீப் சிங் பாஜ்வா, கிருஷ் பகத் ஆகியோா் தலா 2, உமேஷ் யாதவ், ஹா்பிரீத் பிராா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

குரூப் ‘பி’-யில் இருக்கும் இந்த இரு அணிகளுமே இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்க, பஞ்சாப் 3-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3-ஆவது தோல்வியுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.