ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்

வழிகாட்டுதல் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் ஒரே நேரத்தில் விலகியதாக வரும் தகவல்கள் குறித்து...

வழிகாட்டுதல் தமிழ்நாடு

வழிகாட்டுதல் தமிழ்நாடு

Updated On :

வழிகாட்டுதல் (Guidance) தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் ஒரே நேரத்தில் பெருமளவில் விலகியதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலுக்கு பின், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பின் ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகியதாகவும், தற்போது அவர்கள் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவது குறித்தும் பல்வேறுபட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இவர்கள் பணியிலிருந்து வெளியேறியதற்குக் காரணம் என்ன? எவ்வாறு அண்டை மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டார்கள், இவர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீட்டு வாய்ப்புகள் வெளி மாநிலம் சென்றதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்ட.

இந்த நிலையில், வழிகாட்டுதல் தமிழ்நாடு அமைப்பே இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

விளக்கத்தில், ஒரு பொறுப்புள்ள அமைப்பாக, தற்போது ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், பொது நலன் கருதி உண்மைகளைத் தெளிவுபடுத்துவதும் வழிகாட்டுதல் தமிழ்நாடு தனது கடமையாகக் கருதுகிறது.

அண்மைக் காலமாக ஊடகச் செய்திகள் தொடர்பான உண்மைகளைத் தெளிவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.

Story image

அதாவது,

ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வழிகாட்டுதல் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் பெருமளவில் விலகவில்லை.

நிறுவனங்களில் பணியாளர்கள் விலகுவது என்பது இயல்பான ஒரு நிகழ்வாகும். வழிகாட்டுதல் தமிழ்நாடு நிறுவனத்திலும், பணியாளர்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகவே பணியிலிருந்து வெளியேறினர்.

பணியாளர்கள் சிறந்த பணி வாய்ப்புகள், உயர்கல்வி, வேறு இடங்களுக்குக் குடிபெயர்தல் அல்லது தனிப்பட்ட மற்றும் குடும்பக் கடமைகள் போன்ற காரணங்களுக்காக பணியிலிருந்து விலகக்கூடும். அதுபோலவே நடந்துள்ளது.

வழிகாட்டுதல் தமிழ்நாடு நிறுவனம், தனது பணியாளர்களின் தொழில்முறை வாய்ப்புகளை எப்போதும் மதிக்கிறது; பிற இடங்களில் வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் பணியாளர்களின் முடிவையும் அது மதிக்கிறது.

தமிழ்நாடு, முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான போட்டியை எப்போதும் பேணி வருகிறது; இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு தொடர்ந்து ஒரு விருப்பமான முதலீட்டு இடமாகவே திகழ்கிறது என்று விளக்கம் கொடுத்துள்ளது.

Summary

Did employees resign all at once? Tamil Nadu provides clarification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.