தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்

தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே நடந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

Murder

கொலை - பிரதிப் படம்

Updated On :

தமிழ்நாட்டில் தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் தீபாவளியன்று 11 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.

தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் இளம்பெண், திருச்சி ஐடி ஊழியர் என பல்வேறு மாவட்டங்களிலும் கொலைகள் நடந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில், தீபாவளியன்று நடந்த கொலைகள் மற்றும் இதற்கு முந்தைய காலக்கட்டங்களின் தரவுகளையும் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இது குறித்துக் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டுகளிலும் தீபாவளி நாள்களில் கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் 9 கொலைகள், 2023- ஆம் ஆண்டில் 4 கொலைகள், 2024ஆம் ஆண்டில் 10 கொலைகளும், 2025-ஆம் ஆண்டில் 6 கொலைகள் நடந்துள்ளன.

அதுபோல, கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,232 கொலைகள், 2026-ல் 1267 கொலைகள் நடந்திருக்கின்றன என்றும் தமிழ்நாடு காவல்துறை கூறியிருக்கிறது.

Summary

Only 8 murders on Diwali! Tamil Nadu Police clarification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.