செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!
விளம்பரங்களுக்காக ரூ. 473 கோடியை கர்நாடக அரசு செலவு செய்ததாக பாஜக தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா - படம் - ஏஎன்ஐ
விளம்பரங்களுக்காக ரூ. 473 கோடியை கர்நாடக அரசு செலவு செய்ததாக பாஜக தலைவர் விஜயேந்திரா செவ்வாய்க்கிழமை (நவ. 10) குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், மக்களில் நலன்களை புறக்கணித்துவிட்டு, விளம்பரங்களுக்காக மட்டும் ரூ. 473 கோடியை காங்கிரஸ் அரசு செலவு செய்ததாக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜயேந்திரா தெரிவித்திருப்பதாவது:
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, வெறும் மூன்று ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக ரூ. 473 கோடி என்ற பிரம்மாண்டமான தொகையைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒவ்வொரு நாளுக்கும் என்று கணக்கிடும்போது, ரூ. 43 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த செலவுகள் சாலை அமைப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றுக்காக செய்தவை அல்ல. மாறாக, தனது (காங்கிரஸ்) ஆட்சியின் சொந்த விளம்பரத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் வறட்சி மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடுகிறார்கள். நமது இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடித் தவிக்கிறார்கள். பெங்களூருவின் சாலைகள் சிதைந்து வருகின்றன. மேலும் ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைக்காக காத்திருக்கிறார்கள்.
இருப்பினும், அரசானது தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட, விளம்பரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்வர் டி.கே. சிவகுமாரின் புகைப்படங்கள் வரவேண்டும் என்பதை மக்கள் கேட்கவில்லை. மாறாக, நல்ல சாலைகள், மலிவு விலையில் வாழ்க்கை முறை, வேலைவாய்ப்பு, ஒப்பந்தக்காரர்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு உண்மையான ஆதரவு போன்றவற்றை அவர்கள் கேட்கின்றனர் என்று விஜயேந்திரா குறிப்பிட்டுள்ளார்.
Summary
BJP leader Vijayendra alleged on Tuesday (Nov. 10) that the Karnataka government had spent Rs 473 crore on advertisements.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


