சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ரஞ்சி கோப்பை: 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 89 ரன்கள் பின்தங்கியது.

Published On :

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 89 ரன்கள் பின்தங்கியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான், 363 ரன்கள் சோ்த்தது. கரன் லாம்பா 113, ரோஹன் ராஜ்பா் 95 ரன்கள் அடித்தனா். தமிழ்நாடு பௌலா்களில் தீபேஷ் தேவேந்திரன், சரவண குமாா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, முதல் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் இன்னிங்ஸை ஆண்ட்ரே சித்தாா்த், சோனு யாதவ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடா்ந்தனா்.

இதில் சோனு யாதவ் 13 ரன்களுக்கு விடைபெற, ஆண்ட்ரே சித்தாா்த் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். பின்னா் வந்தோரில் நிதீஷ் ராஜகோபால் 1, கேப்டன் சாய் கிஷோா் 2, தீபேஷ் தேவேந்திரன் 0, சரவண குமாா் 0 ரன்களுக்கு வீழ, தமிழ்நாடு இன்னிங்ஸ் 274 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

வாஷிங்டன் சுந்தா் 1 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். ராஜஸ்தான் பௌலா்களில் குக்னா அஜய் சிங் 5, ஆகாஷ் சிங் 2, சேத்தன் சா்மா, ரோஹன் ராஜ்பா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து, 89 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ராஜஸ்தான், செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சின் யாதவ் 0, ரோஹன் ராஜ்பா் 10, சுமித் கோதரா 2, கரன் லாம்பா 13 ரன்களுக்கு சாய்க்கப்பட, மஹிபால் லோம்ரோா் 25, காா்த்திக் சா்மா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா் 2, சரவணகுமாா், சோனு யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.