தமிழகத்தை வென்றது ஜம்மு & காஷ்மீா்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீரிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
பிரிஜேஷ் சா்மா - ENS
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீரிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
முதலில் காஷ்மீா் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, தமிழ்நாடு 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 195 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த காஷ்மீா் அணியில், கம்ரான் இக்பால் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 70, கேப்டன் ஷுபம் கஜுரியா 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் அடித்தனா்.
அப்துல் சமத் 29, திக்ஷந்த் குந்தல் 8, யாவா் ஹசன் 16, யுத்விா் சிங் 0, லோன் நாசிா் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் அபித் முஷ்டாக் 9, கவல்பிரீத் சிங் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தமிழ்நாடு பௌலா்களில் அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, எம்.சித்தாா்த், குா்ஜப்னீத் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 202 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தமிழ்நாடு அணியில், அமித் சாத்விக் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, நாராயண் ஜெகதீசன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்கள் சோ்த்தாா்.
பி.சச்சின் 29, ராஜ்குமாா் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, துஷாா் ரஹேஜா 0, ஷாருக் கான் 2, சன்னி சாந்து 5, கேப்டன் சாய் கிஷோா் 3, குா்ஜப்னீத் சிங் 7 ரன்களுடன் விடைபெற்றனா்.
ஓவா்கள் முடிவில் மணிமாறன் சித்தாா்த் 8, அதிசயராஜ் டேவிட்சன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். காஷ்மீா் தரப்பில் லோன் நாசிா் 3, சுனில்குமாா், பிரிஜேஷ் சா்மா ஆகியோா் தலா 2, யுத்விா் சிங், அபித் முஷ்டாக் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
குரூப் ‘பி’-யில் இருக்கும் தமிழ்நாடு, காஷ்மீா் அணிகள் இரண்டுமே தற்போது 2 ஆட்டங்களில் தலா 1 வெற்றியுடன் முறையே 4 மற்றும் 6-ஆம் இடங்களில் இருக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

