உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!
தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

அமைச்சர் நிர்மல்குமார் | பாஜக தலைவர் தமிழிசை - கோப்புப்படம்
தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை (நவ. 24) கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளப் பதிவில், “திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஒரு சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தை மீறியதை மகிழ்வாக பதிவிடுகிறார் நீங்கள் இப்பொழுது பதிவிட்டு இருப்பது யாருக்கு சொல்லும் செய்தி.
சட்ட அமைச்சராக இருந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையை எதிர்த்திருப்பது கண்டனத்திற்குரியது.
சட்ட அமைச்சராக நீடிப்பதற்கான தார்மீக உரிமையை தமிழக சட்ட அமைச்சர் இழக்கிறார். ஹிந்து உணர்வுகளை மதிக்காமலும் சட்டத்தை மதிக்காமலும் இந்த அரசு நடந்து கொண்ட விதத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
à®à®°à¯ à®à®à¯à® à®à®®à¯à®à¯à®à®°à¯ à®à®à¯à® நà¯à®¤à®¿à®®à®©à¯à®±à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®à¯à®à®¤à¯à®¤à¯ à®®à¯à®±à®¿à®¯à®¤à¯ à®®à®à®¿à®´à¯à®µà®¾à® பதிவிà®à¯à®à®¿à®±à®¾à®°à¯ நà¯à®à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà¯à®´à¯à®¤à¯ பதிவிà®à¯à®à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ யாரà¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®¿.. à®à®à¯à® à®à®®à¯à®à¯à®à®°à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®à¯à® நà¯à®¤à®¿à®®à®©à¯à®±à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®à®¾à®² நà®à®µà®à®¿à®à¯à®à¯à®¯à¯ à®à®¤à®¿à®°à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®£à¯à®à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®°à®¿à®¯à®¤à¯.. à®à®à¯à® à®à®®à¯à®à¯à®à®°à®¾à® நà¯à®à®¿à®ªà¯à®ªà®¤à®±à¯à®à®¾à®©â¦ https://t.co/V1LUXxXPCQ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 24, 2026
Summary
BJP leader Tamilisai Soundararajan condemned Tamil Nadu Law and Electricity Minister Nirmal Kumar on Tuesday (Nov. 24).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


