திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட தமிழிசை கைது!
திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்
திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜ மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நான் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருக்கிறேன் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்? என தமிழிசை வாக்குவாதம் செய்தார்.
பிறகு, அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, விமான நிலையத்தில் பேசிய தமிழிசை, திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படாவிட்டால், அதற்கான பின்விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும். நீதிமன்றம் கூறியும் நீதி கிடைக்காதபட்சத்தில், பாஜக தலைவர்கள் கூடி ஆலோசித்து அடுத்தகட்டத் தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

