கார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயில் - கோப்புப்படம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றுவதற்கான பழமையான தாமிரக் கொப்பரை மற்றும் பிரமாண்ட திரி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பழமையான தாமிரக் கொப்பரை மற்றும் பிரமாண்ட திரி ஆகியவை தயார் செய்யப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான தாமிரக் கொப்பரை ஆண்டுதோறும் சுத்தம் செய்யப்பட்டு, தீபம் ஏற்றுவதற்காகத் தயார் செய்யப்படுகிறது.
சுமார் 4 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்ட இந்தத் தாமிரக் கொப்பரையில் சுமார் 400 லிட்டர் நெய் நிரப்பப்படுகிறது. இதில் 150 மீட்டர் நீளமுள்ள காடா துணியால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும், 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்காகத் தாமிரக் கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 150 மீட்டர் நீளமுள்ள திரி உள்ளிட்ட தேவையான பொருள்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக கொப்பரை மற்றும் திரி ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலும், தீபத்தூண் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை உச்சியில் நடைபெற உள்ள மகா தீப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
Karthigai Deepam! A copper cauldron atop the peak of Tiruparankundram hill!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

