தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றதைப் பற்றி...

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்.

Updated On :

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.

​முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ. 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

​விழா நாள்களில் தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், தங்க மயில் வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மனுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை இரவு சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், வைர கிரீடம், சேவல் கொடி சாற்றப்பட்டு பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

​தேரோட்டம்

விழாவின் முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன்.

இதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

​மலை மேல் மகா தீபம்

விழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை மாலை கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால தீபம் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. ​இதற்காக 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட 70 கிலோ எடையிலான தாமிரக் கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

150 மீட்டர் காடா துணியால் ஆன திரி மற்றும் 5 கிலோ சூடம் ஆகியவற்றைக் கொண்டு மகா தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலையிலிருந்து தீப நிபுணர் மணிகண்டன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக கோயில் சஷ்டி மண்டபத்தில் மகா தீபம் ஏற்றும் கொப்பரை நெய் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Summary

At the Arulmigu Subramania Swamy Temple in Tirupparankundram, the chariot procession—the highlight of the Karthigai Deepam festival—took place with great grandeur on Tuesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.