கார்த்திகை தீபம்! பர்வதமலை ஏற 1,200 பேருக்கு மட்டும் அனுமதி!
பர்வதமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து...

பர்வதமலை - file image
கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வமலையில் ஏறிச் சென்று, சுவாமி தரிசனம் செய்வதற்கு 1,200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படுவது பர்வதமலை. சுமார் 4560 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலையின் உச்சியில் மல்லிகார்ஜூனர் பிரமராம்பிகை கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்குச் செல்வதற்கு கரடுமுரடான பாதைகள், செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாள்களில் இங்கு அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
அதே போல் கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதனால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளன்று சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு கார்த்திகை தீபத்தன்று 1,200 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை மகா தீபத் திருநாள் அன்று காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு சுமார் 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியூர் பயணிகள் https://parvathamalai.hrce.tn.gov.in/ என்று இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பக்தர்கள் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

