குன்றத்தூரில் கந்தசஷ்டி விழா: தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்த முருகன்!
குன்றத்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியதைப் பற்றி...

குன்றத்தூர்
குன்றத்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சார்பில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முருகனுக்கு உகந்த நாளான கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கிய நிலையில் காலை முதலே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவியத் தொடங்கினார்கள். செவ்வாய்க்கிழமை, கந்த சஷ்டி விழா தொடக்கம் ஒரே நாளில் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோயில் வளாகத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் சந்தனக் காப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டு சென்றனர். அது மட்டுமின்றி லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
லட்சார்ச்சனையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சூரசம்காரமும், திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது தற்போது சூரசம்ஹார விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக பொது தரிசனம், கட்டணம் தரிசனம் அனுமதிக்கப்பட்டு இருந்தது இன்றைய தினத்தில் உற்சவர் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

