மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

சுவாமி மலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியது பற்றி..

Updated On :

முருகனின் நான்காம் படை வீடான சுவாமி மலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமி மலை அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்ட இத்தலத்தில், 60 தமிழ் வருட தேவதைகளும், முருக பக்தர்களுக்கு சேவை செய்யும் வகையில், 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.

"ஓம்" எனும் மந்திரப் பொருளை, தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து, உபதேசம் செய்து, சுவாமிக்கே, நாதன் ஆனதால் இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், கந்த சஷ்டி திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு திருவிழா இன்று தொடங்கியது.

சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமமேதராக வீரகேசரி, வீரபாகு ஆகியோருடன், மலைக்கோயிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருதளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவினை ஒட்டி தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 6ம் நாளான, சஷ்டி நன்ளான வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில், வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் தொடர்ந்து மாலை தாயார் மீனாட்சி அம்மனிடம், சண்முகர் சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் பின்னர், கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. பின்னர் நிறைவாக, தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.