மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கந்த சஷ்டி: திருச்செந்தூா் கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

Updated On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கோயிலில் வரும் 10ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15ஆம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தா்கள் தங்குவதற்காக தற்காலிக கொட்டகைகள், தற்காலிக வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அவற்றை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிராசத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன், இணை ஆணையா் அருணாச்சலம், துணை ஆணையா் யக்ஞ நாராயணன், உதவி ஆணையா் லோகநாதன், டிஎஸ்பி மகேஷ்குமாா், அறங்காவலா்கள் செல்வராஜ், பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.